Thursday, December 20, 2012

ப்ளாக் பதிவுக்குள் கூகிள்+ நண்பர்களை Mention / Tag செய்ய


DEC 19, 2012

ப்ளாக் பதிவுக்குள் கூகிள்+ நண்பர்களை Mention / Tag செய்ய

கூகிள் தனது சமூக வலைத்தளமான கூகிள்+ ஐ ப்ளாக்கர் சேவையோடு தொடர்பு படுத்தி புதிய வசதிகளைக் கொண்டு வருகிறது. ஏற்கனவே உங்கள் பிளாக்கர் புரோபைலை (Author Profile) கூகிள்+ புரோபைலாக மாற்றிக் கொள்ளும் வசதியைக் கொடுத்திருந்தது. இன்றைக்கு நீங்கள் பிளாக்கில் பதிவுகளை எழுதும் போதே உங்களின் நண்பர்களை அல்லது பிற கூகிள்+ பக்கங்களையோ (Google+ Pages) Mention / Tag செய்யும் வசதியைக் கொண்டு வந்திருக்கிறது.


கூகிள் பிளஸில் உங்கள் நண்பர்களைக் குறிப்பிட்டுச் சொல்ல அல்லது அழைக்க, அவர்களின் பெயர்களுக்கு முன் ”+” குறியீடு கொடுத்து Tag / Mention செய்வோம். அதைப் போலவே பிளாக்கரில் பதிவெழுதும் போது உங்கள் நண்பர்களைக் குறிப்பிட “+” குறியீடை அடித்து விட்டு அவர்களின் பெயரின் முதல் சில எழுத்துகளை அடித்தால் நண்பர்களின்/பக்கங்களின் பட்டியல் பதிவிற்குள்ளேயே தெரியும்.

உதாரணத்திற்கு +Subadhra R
 

பதிவினைப் போஸ்ட் செய்த பிறகு பார்த்தால் பதிவில் அவர்களின் பெயர் சுட்டியாக (Link) தெரியும். அந்த இணைப்பின் மீது மவுசைக் கொண்டு சென்றால் மற்றவர்கள் அவரை இணைத்துக் கொள்ள Add to Circles என்று தெரியும். அதனை நேரடியாக கிளிக் செய்தால் அவர்களின் கூகிள்+ புரோபைலுக்குச் சென்று விடலாம்.

மேலும் நீங்கள் பதிவிட்ட பின்னர் அதனை கூகிள்+ இல் Share செய்யுமாறு ஒரு பெட்டி தோன்றும். அதில் பதிவில் நீங்கள் Tag செய்த நண்பரின் பெயரும் வந்து விடும். இதன் மூலம் அவருக்கும் Tag Notification சென்று விடும். 

இந்த வசதியைப் பெற நீங்கள் உங்களின் ப்ளாக்கர் புரோபைலை கூகிள்+ புரோபைலுக்கு மாற்ற வேண்டும். இதற்கு பிளாக்கர் தளத்தில் சென்று வலதுபுறம் உள்ள Settings பட்டனைக் கிளிக் செய்து Connect to Google+ என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் கூகிள்+ புரோபைல் தோன்றியவுடன் Switch to Google+ என்பதைக் கிளிக் செய்து மாற்றிக் கொள்ளவும்.


No comments:

Post a Comment