Tuesday, May 28, 2013


Follow Us

__________________



இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை

First Published : 28 May 2013 02:23 AM IST
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கோட்ட மேலாளராகப் பணியாற்றியவர் டி.புகழேந்தி. கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி புகழேந்தியும், அவரது மனைவியும் தங்களின் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குத் தொடர்ந்தனர்.
கடந்த 2009-ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணை சி.பி.ஐ. வழக்குகளுக்கான சென்னை 12-ஆவது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி ஆர்.கிள்ளிவளவன் திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.
புகழேந்தி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக சி.பி.ஐ. சுமத்திய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் புகழேந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அவரது மனைவிக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது என்று அந்தத் தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment