Tuesday, September 24, 2013

ட்விட்டரில் குறிப்பிட்ட நேரத்தில் தானாக அழியும் Tweet களை உருவாக்க

Twitter Sprit - Set Expiry for tweets
தற்போதைய சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமான ஒன்றான ட்விட்டர் (Twitter) பல சேவைகளுக்குப் பயன்படுகிறது. 140 எழுத்துகள் எல்லையுடன் செய்திகளை பல நண்பர்களுக்கு அனுப்பவும் வலைப்பதிவர்கள் தங்களது பதிவுகளை ட்விட்டரில் போட்டு Blog Traffic அதிகரிக்கவும் செய்யலாம். மேலும் ட்விட்டரில் அவசர செய்திகள், உதவிகள், விளம்பரங்கள் போன்றவையும் அதிகளவில் பகிரப்படுகின்றன.

டுவிட்டரில் பகிரப்படும் அனைத்து செய்திகளும் நமது Timeline இல் நாமாக அழிக்கும் வரை இருக்கும். உங்களைப் பின் தொடரும் புதியவர்களும் உங்களின் அனைத்து பதிவுகளையும் பார்க்க முடியும். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் / நேரத்திற்குள் மட்டுமே பயன்படும் சலுகைகள், கூப்பன்கள் போன்றவை பற்றிய செய்திகள் Timeline இல் இருந்து கொண்டே இருந்தால் பயனில்லை அல்லவா? நண்பர்கள் அதனைக் கிளிக் செய்தால் சலுகை முடிந்து விட்டது (Expiry) என செய்தி வந்தால் எரிச்சல் அடைவார்கள்.

இதற்குத் தீர்வாக இருக்கும் பயன்பாடு தான் TwitterSprit. இதன் மூலம் நமது ட்விட்களுக்கு காலாவதி நேரம் (Expiry Time) அமைக்கலாம். இது நாளாகவோ அல்லது மணிகளாகவோ இருக்கலாம்.( Days or Hours). அதற்குப் பிறகு ட்விட்கள் தானாகவே உங்கள் டைம்லைனில் இருந்து அழிந்து விடும்.

Twitter இல் ட்விட்களுக்கு Expiry Time அமைக்க 

• TwitterSprit.com தளத்திற்கு சென்று "Get Spirit" பட்டனைக் கிளிக் செய்து உங்கள் ட்விட்டர் ஐடியை வைத்து லாகின் செய்யுங்கள்.
Twitter Sprit - Set Expiry for tweets

• அடுத்து Sprit பயன்பாட்டை Authorize செய்ய “Sign In” பட்டனைக் கிளிக் செய்யவும். அவ்வளவு தான்.

அடுத்து நீங்கள் ட்விட் செய்யும் போது Hashtag உடன் இணைத்து எத்தனை நிமிடங்கள், மணிகள், நாட்கள் என்று முடிவு நேரம் அமைக்கலாம். நீங்கள் எங்கிருந்து ட்விட்ட்ரைப் பயன்படுத்தி வந்தாலும் குறிப்பிட்ட நேரம் முடிந்தவுடன் ட்விட்கள் தானாகவே அழிந்து விடும்.

(எ.கா) #5m – 5 minutes, #9h – 9 hours, #1d – 1 day

Twitter லிருந்து Sprit பயன்பாட்டை நீக்க

ட்விட்கள் தானாக அழிந்து விடும் Sprit Application வசதி வேண்டாம் எனில் அதன் செயல்பாட்டை நீங்கள் நிறுத்தி வைக்கலாம். Twitter Settings ->Apps பகுதியில் Sprit என்பதற்கு நேராக உள்ள“Revoke access” கொடுத்தால் போதும். மீண்டும் வேண்டுமெனில் Enable செய்து விடலாம்.

Read Also:  டுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி?

டுவிட்டரிலிருந்து தானாக பேஸ்புக்கில் அப்டேட் செய்ய 

No comments:

Post a Comment