இனி ஐடி கார்டு இல்லாமல் ரெயில் பயணம் செல்லமுடியாது!
செவ்வாய், 14 ஆகஸ்ட் 2012( 11:30 IST )
ரெயிலில் இனி 2ஆம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்பவர்கள் தங்களது புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அடையாள அட்டையை இல்லையென்றால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இந்த நடைமுறை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
ரெயில் டிக்கெட் எடுப்பது தற்போது குதிரைக் கொம்பாக இருக்கிறது. அதுவும் பண்டிகை காலங்களில் டிக்கெட் கிடைப்பதே இல்லை. இதனால் கள்ளச்சந்தையில் டிக்கெட் வாங்கும் புரோக்கர்கள் ஒரு டிக்கெட்டை ஆயிரம் முதல் 2 ஆயிரம் முதல் விற்பனை செய்கிறார்கள்.
அவசர பயணம் மேற்கொள்பவர்கள் டிராவல் ஏஜெண்டுகளிடம் அதிக விலைக்கு டிக்கெட்டை வாங்கி பயணம் மேற்கொள்கிறார்கள். அப்போது, அந்த டிராவல் ஏஜெண்டுகள் டிக்கெட் வாங்குபவர்களிடம் ஒரிஜினல் அடையாள அட்டையை கண்டிப்பாக கொண்டு செல்லுங்கள் என்று கூறுவதில்லை. இதனால் பல பயணிகள் ஜெராக்ஸ் நகலை வைத்துக் கொண்டு பயணம் மேற்கொள்கிறார்கள். இதனால் அவர்கள் அபராத தொகை கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
அதுமட்டுமின்றி டிராவல் ஏஜெண்டுகளிடம் கூடுதல் விலை கொடுத்து டிக்கெட் வாங்கி பயணம் செய்பவர்கள், ஒருவர் பெயரில் உள்ள டிக்கெட்டில் வேறொருவர் பயணம் செய்வது போன்ற முறைகேடுகளை முற்றிலுமாக களைவதற்கு ரெயில்வே நிர்வாகம் தற்போது பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, பயண தேதிக்கு ஒரு நாளைக்கு முன்பு எடுக்கக்கூடிய தட்கல் டிக்கெட்டைப் பொருத்தவரை, யார் ரெயிலில் பயணம் செய்யப் போகிறார்களோ? அவர்களது புகைப்படத்துடன்கூடிய ஒரிஜினல் அடையாள அட்டையைக் காண்பித்துதான் தட்கல் டிக்கெட் எடுக்க முடியும்.
ஏ.சி.பெட்டியில் பயணம் செய்பவர்களிடம் அடையாள அட்டை இருக்க வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி அமலுக்கு வந்தது. ஏ.சி. பெட்டியில் அடையாள அட்டை இல்லாமல் பயணம் செய்பவர்கள், டிக்கெட் இல்லாத பயணிகளாக கருதப்பட்டு அவர்களிடம் அதற்கான அபராதத்துடன்கூடிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதுபோன்ற நடைமுறை 2ஆம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்பவர்களும் கண்டிப்பாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்ற புதிய திட்டம் நடைமுறைக்கு வர இருக்கிறது.
அதன்படி, ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் யாராவது ஒருவர் கட்டாயம் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். தனி நபராக பயணம் செய்யும் அனைவரும், தனித்தனியே புகைப்படத்துடன்கூடிய ஒரிஜினல் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள், டிக்கெட் இல்லாத பயணியாகக் கருதப்பட்டு, அபராதத்துடன்கூடிய கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரெயிலில் 2ஆம் வகுப்பு பெட்டியிலும், அடையாள அட்டை கட்டாயம் என்ற இந்தப் புதிய முறை நடைமுறைக்கு வந்தால், டிக்கெட் விற்பனையில் முறைகேடுகள் முற்றிலுமாகத் தடுக்கப்படும்.
இந்தப் புதிய திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்துவதற்காக தேவையான ஏற்பாடுகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் உருவாக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகத்துக்கு அமைச்சர் முகுல்ராய் உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய திட்டம் அடுத்த மாதம் நடைமுறைக்கு வருகிறது

No comments:
Post a Comment