Friday, March 2, 2012

இணையமுகவரி மாறாமலிருக்க ஒரு ட்ரிக்

Thanks to:  
 ===================

பிளாக்கர் தளங்கள் Redirect ஆவதைத் தடுக்க புதிய ட்ரிக்

 Mar 2, 2012


Stop Blogger Redirecting Country Wise Domainsஜனவரி மாதத்தில் கூகிளின் இலவச சேவையான பிளாக்கரில் இலவச பிளாக்ஸ்பாட் தளங்கள் வைத்திருப்போரின் இணைய முகவரி பார்ப்பவரின் நாட்டுக்கு ( .in, .com.au) ஏற்ப மாறுமாறு( Redirection) செய்தது. செய்திகளின் தணிக்கை விசயத்திற்காக செய்யப்பட்ட இந்த முறையில் பிளாக்கர்கள் குழப்பமடைந்தனர். தேடுபொறிகளில் வலைத்தளத்தின் தரம் பின்னடையலாம் என்பதே அதற்குக் காரணம். இந்த நாடு வாரியாக இணைய முகவரியை மாற்றும் செயலால் திரட்டிகளில் பதிவைச் சேர்ப்பதிலும் அலெக்சா ரேங்க் போன்றவற்றிலும் பிரச்சினை ஏற்பட்டது.

தற்பொழுது இந்த இணையமுகவரி மாறாமலிருக்க ஒரு ட்ரிக் கண்டுபிடித்து உள்ளார்கள். வாசகர்கள் எந்த நாட்டிலிருந்து பார்த்தாலும் ஒரிஜினல் முகவரியான .com க்குச் செல்லும்படி செய்யலாம். வந்தே மாதரம் தளத்தில் இதற்கான நிரல்வரிகளை நண்பர் குறிப்பிட்டிருந்தார். இதில் நான் ஒன்றைக் கவனித்தேன். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் முகவரிக்கு Redirect ஆகும் போது மட்டுமே .com க்கு மறுபடியும் மாற்றும் படி அந்த நிரல் இருக்கிறது. கூகிள் இந்த முறையை மேலும் சில நாடுகளுக்கு அப்டேட் செய்யும் போது, அதாவது .uk, .us போன்ற மற்ற நாடுகளிலும் இந்த முறையைக் கொண்டு வரும் போது அந்த நிரல் வேலை செய்யாது.
Stop Blogger Redirecting Country Wise Domainsஎனவே அந்த நிரலில் மாற்றம் செய்து எந்த நாட்டிலிருந்து பார்த்தாலும் .com/ncr முறையைப் பயன்படுத்தி நமது வலைப்பூவின் ஒரிஜினல் முகவரிக்கேப் போகும்படி செய்யுமாறு மாற்றினேன்.

<script>
var str= window.location.href.toString();
if ((str.indexOf('.com/'))=='-1') {
var str1=str.substring(str.lastIndexOf(".blogspot."));
window.location.href =window.location.href.toString().replace(str1,'.blogspot.com/ncr/');

}
</script>

இந்த நிரல்வரிகளை காப்பி செய்து உங்கள் பிளாக்கர் டாஷ்போர்டில் Design-> Edit Html செல்லவும்.
<b:include data='blog' name='all-head-content'/>
என்ற வரியைத் தேடி அதற்கு கீழே பேஸ்ட் செய்து கொள்ளவும். இந்த நிரலின் மூலம் பிளாக்கர் தளம் வேறு நாட்டின் முகவரிக்கு ஏற்ப மாறுவது நிறுத்தப்படும்.

கூகிளின் விளக்கத்தின் படி .com/ncr பயன்படுத்துவது வாசகரின் கணிணியில் குக்கீ ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலமாக தற்காலிகமாக .காம் முகவரி செயல்படும். இந்த நாடு வாரியாக பிளாக்கர் தளங்களை Redirect செய்யும் கூகிளின் அடுத்த கட்ட அப்டேட் ஏதும் வரவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

See Also :
பிளாக்கரின் டொமைன் முகவரி மாற்றம் காரணமும் சிக்கல்களும்

No comments:

Post a Comment