Tuesday, April 30, 2013

வெளிநாடு வாழ் இந்தியர் அட்டை (ஓசிஐ) வைத்திருப்போருக்கு புதிய விதிமுறை

http://dinamani.com/world/2013/05/01/ 

வெளிநாடு வாழ் இந்தியர் அட்டைதாரர்களுக்கு புதிய விதிமுறைகள்

First Published : 01 May 2013 03:16 AM IST
வெளிநாடு வாழ் இந்தியர் அட்டை (ஓசிஐ) வைத்திருப்போருக்கு புதிய விதிமுறைகளை வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அட்டை (ஓசிஐ) வைத்திருப்போர், இந்தியாவுக்கு பயணிக்கும் போது ஓ.சி.ஐ. அட்டை, யு விசா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாஸ்போர்ட், போன்றவற்றை கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும்.
ஓசிஐ அட்டை வைத்திருப்போர் எத்தனை முறை வேண்டுமானா லும் இந்தியாவுக்குள் வந்து செல்லலாம். மேலும் வாழ்நாளுக்குரிய விசாவும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. 50 வயதுக்கு மேற்பட்டோர் புதிய பாஸ்போர்ட் பெற்றவுடன் ஓசிஐ அட்டை ஆவணங்களை மீண்டும் பெற வேண்டும்.
அவசர பணியின் நிமித்தம் செல்லும் போது ஓசிஐ அட்டைதாரர் பழைய பாஸ்போர்ட்டையும், யு விசா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஓசிஐ அட்டையையும் கொண்டு செல்லலாம்.
ஓசிஐ அட்டைதாரர்களின் மைனர் குழந்தைகள் ஓசிஐ அட்டை பெற இயலாது. அவர்களுக்கு இந்திய வம்சாவளியினர் என்ற அட்டை மட்டுமே வழங்கப்படும். ஓசிஐ அட்டை வைத்திருப்போர் இந்தியாவில் உள்ள உள்ளுர் காவல் நிலையத்தில் ஆஜராகத் தேவையில்லை.
பான்கார்ட் பெறவும், வங்கியில் புதிய கணக்கு தொடங்கவும் ஓசிஐ அட்டையை அடையாளச் சான்றாக பயன்படுத்தலாம். ஆனால் ஓசிஐ அட்டைதாரர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது. இந்திய அரசு வேலைவாய்ப்பையும் பெற இயலாது. ஓசிஐ அட்டைதாரர் வாழ்நாள் முழுவதும் விசா இல்லாமல் இந்தியாவில் பயணிக்கலாம் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Saturday, April 27, 2013

ஒரு சின்ன சோலார் டிஷில் ஊருக்கே மின்சாரம் தரலாம்?

நிச்சயமாக இது ஒரு வரப்பிரசாதம்......

ஒரு சின்ன சோலார் டிஷில் ஊருக்கே மின்சாரம் தரலாம் - IBM'ன் புதிய 3 இன் 1 சோலார் தொழில்நுட்பம்:

IBM's 3 in 1 Solar Invention can give Electricity / Water / Air-Conditioning - 3 இன் 1 சோலார் கண்டுபிடிப்பு / ஒரே நேரத்தில் அதிக மின்சாரம், தூய குடிதண்ணீர், மற்றும் குளிர்ந்த காற்று கிடைக்கும் வசதி - செலவும் மிக மிக குறைவு

உலகத்தில் பல சோலார் கண்டுபிடிப்பு வந்தாலும் அது மிக ஸ்லோவாக தான் நடை முறை படுத்தும் காரணம் அதன் விலை. சோலார் எனர்ஜியை மின்சாரமாக மாற்றுவதற்க்கு கண்ணாடி, சிலிக்கான் போன்ற பல மினிரல்கள் சேர்த்து தான் ஃபொட்டோ வால்ட்டிக் என்னும் சோலார் கன்வெர்ஷன் செய்து மின்சாரம் பெறப்படுகிறது. இப்போது ஐபிஎம் ஒரு புது வகை சோலார் டெக்னாலஜியை கன்டுபிடித்துள்ளது. இதற்க்கு பெயர் High Concentration PhotoVoltaic Thermal (HCPVT) இதன் மூலம் ஒரு சென்டிமீட்டர் சிப்பில் 2000 மடங்கு சூரிய சக்தி கிடைக்கும் அளவுக்கு மிகவும் எளிதான சில மெட்டல்கள் மூலம் அமைத்துள்ளனர்.

இதில் 30% சூரிய சக்தியை மின்சாரக மாற்றியும் மீதி உள்ள சூடில் உப்பு தண்ணீரை சேலினேட் முறையில் நல்ல தண்ணீராக மாற்றியும் மிச்சம் உள்ள எனர்ஜியில் குளிர்ந்த காற்று கிடைக்குமாறு 3 இன் 1 ஆக அமைத்திருக்கிறார்கள்.
அதாவது பொதுவாக இப்போது உள்ள ஒரு முழு சோலார் ஃபோட்டோவால்டிக் பிளேட் மூலம் 300 வாட்ஸ் கிடைக்கும் ஆனால் இங்கு 1 சென்டி மீட்டரில் 200 முதல் 250 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும். ஒரு இரண்டடிக்கு இரண்டி இருந்தால் முழு வீட்டுக்கு 8 மணி நேர சூரிய சக்தியில் 24 மணி நேரமும் கிடைக்கும் என்றால் பெரிய கண்டுபிடிப்பு தான். அதாவது ஒரு ஊருக்கே ஒரு டிஷ் போது. இவர்கள் சஹாரா பாலைவனத்தில் 2% சதவிகித இடம் கொடுத்தால் உலகத்தின் மொத்த மின்சார தேவையும் எந்த ஒரு எனர்ஜி இல்லாமல் 100% கிடைக்குமாம்.
இதை அமைக்க வெறும் 12,500 ரூபாய் தான் ஒரு ஸ்கொயர் மீட்டருக்கு ஆகும் செலவு அது போக 1000 யூனிட் கரென்ட்டுகு வெறும் 5 ரூபாய் தான் செலவு.கூடவே தண்ணீர் பஞ்சம் மற்றூம் இயற்கை ஏசி வேறு கிடைக்கும் மக்களே.

via - Ravi Nag

Like ·  ·  · Thursday at 11:23am